என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பயணிகள் மறியல்
நீங்கள் தேடியது "பயணிகள் மறியல்"
அரக்கோணத்தில் நேற்று இரவு மின்சார ரெயில் தாமதத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.
நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் பயணிகள் ரெயில் தினந்தோறும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கு வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் காலதாமதமாக தொடர்ந்து வந்தது.
இதனால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி அவர்கள் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து பாண்டிச்சேரி ரெயில் காலதாமதமாகவே வந்தது. இன்று காலை இந்த ரெயிலுக்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.
வழக்கம் போல் அந்த ரெயில் காலை 9.20 மணிக்கு தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது சில பயணிகள் மின்சார ரெயில் பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் இருந்து வந்த காச்சிகுடா, காக்கிநாடா எக்ஸ்பிரஸ்ரெயில்களும், திருமால்பூர் மின்சார ரெயிலும் வரும் வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இதே போல் சென்னையில் இருந்து வந்த ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரெயில்களை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் காலதாமதமாக வந்தால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு:
திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலதாமதமாக வந்து செல்கின்றன. இதனால் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்வோரும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி ரெயில்வே ஊழியர்களிடம் புகார் செய்தும் வழக்கம் போல் ரெயில்கள் தாமதமாக வந்து சென்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருத்தணி ரெயில் நிலையத்தில் சுமார் 200-க் கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி செல்லும் விரைவு ரெயில் தாமதமாக வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்த மின்சார ரெயிலையும் மறித்தனர். பயணிகள் அனைவரும் தண்டவாளத்தில் நின்றபடி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி. சேகர், தாசில்தார் நரசிம்மன், ரெயில்வே இன்ஸ்பெக்டர் முகேஷ் ரஷாக் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
×

X